பக்கங்கள்

ஜனவரி 31, 2011

பின் புத்தி ? - pin puththi ?

முதலிரவில், அவள் கொடுத்த
முதல் முத்தத்தின் பசையில்,
உதடுகள் ஒட்டியது - இன்றும்
கேள்வி கேட்க முடியாமல் வாய்
மூடியே கிடக்கிறது!
பெண் புத்தி பின் புத்தி என்று சொன்ன மேதை எவனடா ?

mudhaliravil, aval kodutha
mudhal muththathin pasayil,
udhadugal ottiyadhu - indrum
kelvi ketka mudiyaamal vaai
moodiye kidakkiradhu!
pen puththi pin puththi endru sonna medhai evanadaa ?






ஜனவரி 27, 2011

ஆற விடாதே - aara vidaadhe

கையில் இருப்பது
அமுதா விஷமா என்று
குழம்பிய நேரத்தில்,
அது ஆவியானது,
நுரைமட்டுமே மிஞ்சியது!!!

kaiyil irunppadhu
amudha vishama endru
kuzhambiya neraththil,
adhu aaviyaanadhu,
nurai mattume minjiyadhu!!!





ஜனவரி 23, 2011

நிலாக் காதல் - Nilaa Kaadhal

தினம் ஒரு புது நிலவு வருவதுமில்லை,
மறைந்த நிலவு மறுநாள் வராமல் போவதுமில்லை,
தினம் அது வந்தாலும், என்றும் நம் கை வந்து சேர்வதுமில்லை,
கைப்பற்ற துடித்து செல்பவன் காலடியில் மட்டுமே அது கிடக்கும் !
புரிகிறதா, ஏன் காதல் நிலவோடு ஒப்பிடப் படுகிறதென்று?


thinam oru pudhu nilavu varuvadhumillai,
maraindha nilavu marunaal varaamal povadhumillai,
thinam adhu vandhaalum, endrum nam kai vandhu servadhumillai,
kaipattra thudiththu selbavan kaaladiyil mattume adhu kidaikkum !
pugiradha, ean kaadhal nilavodu oppida padugiradhendru?






ஜனவரி 22, 2011

கவிதை மேட் ஈசி - kavidhai made easy

கற்பனை தீட்டி கவி ஈட்டும் கவிஞர்களே, ரகசியம் கேளுங்கள்!!!

மனதில் இருப்பதை அப்படியே கிறுக்குங்கள்...
பொருள் பிழையும் உவமையாகும்,
சந்திப்பிழையும் அணி சேர்க்கும்!!!

எழுதிய வரிகளை சரிப்பார்க்காதீர்கள்...
முடிக்காத சில வரிகள் வினாவாகும்,
அதுவே சிலருக்கு விடையும் தரும்!!!

உண்மை உணர்ச்சிகளை உதிரியாக்கி மாலை பின்னுங்கள்...
வாலியும் வாயடைத்து நிற்பான்,
வைரமுத்துவும் வயிறு எரிந்து போவான்!!!







ஜனவரி 20, 2011

என் செவி வழியே "என்னமோ ஏதோ" - en sevi vazhiye "ennamo edho"

என் இடுகையில் குறிப்பிட்டது போல, கடந்த சில நாட்களாய் என் ipod-ல் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் "கோ" திரைப்படத்தில் வரும் "என்னமோ ஏதோ / குவியமில்லா".

இந்த பாடலை பற்றி எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆகையால் இதோ என்னுடைய முதல் பாடல் விமர்சனம்....




படம் : கோ
இயக்கம் : K.V. ஆனந்த்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : மதன் கார்க்கி

இசை
இனிய பாடல்கள் அமைப்பது ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல் அந்நிய பாப் பாடல்கள் சிலவற்றை  தழுவியே இசை அமைத்துள்ளார். இங்கு நான் புகார் பண்ணுவதாக நினைக்க வேண்டாம். "சுட்ட பழமாக இருந்தால் என்ன? சுவையாக இருந்தால் போதும்!!" என்ற புதுமொழி படி வாழ்பவன் நான்.

குரல் / பாடிய விதம்
ஆலாப் ராசு மிக அருமையாக பாடியுள்ளார். குரல் வசீகரமாக உள்ளது. பாப் பாடகர் Akon போல பாட முயன்றிக்கிறார், அதை அழகாவும் செய்திருக்கிறார். பாடல் நடுவில் வரும் Rap கொஞ்சம் எரைச்சலாகவே உள்ளது.

பாடல் வரிகள்
நான் இந்த விமர்சனம் எழுதுவதற்கான முக்கிய காரணமே இந்த பாடலில் வரும் வரிகள் தான். அழகான வார்த்தைகளை பயன்படுத்தி அருமையாக உணர்ச்சிகளை பின்னி இருக்கிறார் மதன் கார்க்கி. பாடல் வரிகளை படிக்க இங்கு செல்லவும்.

என்னை மிகவும் கவர்ந்த சில வரிகள்,

  1. குவியமில்லா ஒரு காட்ச்சிப் பேழை - படத்தின் கதாநாயகன் நிழல் படம் எடுப்பவர். அதற்க்கு பொருந்த இந்த வரிகளை எழுதியுள்ளார் கார்க்கி. இப்படி பல technical வார்த்தைகளை பொருத்தமாக பயன்படுத்துவதில் வல்லவர் என்று அவர் முன்பே எந்திரன் படம் பாடல்கள் வழியாக நிருபித்துள்ளார். 
  2. ஏதோ அரைமனதாய் விடியுது என் காலை 
  3. நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும், அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்.
  4. நிழலை திருடும் மழலை நானோ - எனக்கு மிகவும் பிடித்த வரி இதுதான் :)
பின் குறிப்பு: கோ பட பாடல்களை கேட்க paadal.com செல்லவும்




ஜனவரி 18, 2011

என்னமோ ஏனோ - ennamo yeno

நேற்று இரவு முதல் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல், "கோ" படத்தின் "என்னமோ ஏனோ" பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதன் கார்க்கியின் வரிகள் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. அந்த பாடலுக்கு என்னுடிய இந்த வரிகள் சமர்ப்பணம்! :)

என்னமோ ஏனோ
நத்தை நகருது பகலில்,
பித்தம் பிடிக்குது இரவில்,
முத்தம் பறக்குது கனவில்!!!

என்னமோ ஏனோ
விழி பிதுங்குது உன் அழகில்,
இரத்தம் உறையுது உன் குரலில்,
உயிர் கசியுது உன் இதழில்!!!

ennamo yeno
naththai nagarudhu pagalil,
piththam pidikkudhu iravil,
muththam parakkudhu kanavil!!!

ennamo yeno
vizhi pidhunggudhu un azhagil,
raththam uraiyudhu un kuralil,
uyir kasiyudhu un yidhazhil!!!




ஜனவரி 16, 2011

என் பார்வையில் "ஆடுகளம்" - Aadukalam

இதுவே என்னுடைய முதல் சினிமா விமர்சனம்.


படம்: ஆடுகளம்
இயக்கம்: வெற்றிமாறன்
தயாரிப்பு: கதிரேசன்
இசை: G.V.பிரகாஷ்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
நடிப்பு: தனுஷ், தாப்சீ பண்ணு, கிஷோர் 


எதிர்பார்ப்பு
சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல், நேரம் கழிப்பதற்க்காக நண்பனோடு நான் பார்த்த படம் "பொல்லாதவன்". படத்தை பார்த்து மிரண்டு போனேன். வெற்றிமாறன் மீது பெரிய மரியாதை வந்தது. அதே கூட்டணி வழங்கிய அடுத்த படம்தான் இந்த ஆடுகளம். படம் எடுக்க ஆரம்பித்த நாள் முதல் நான் பட வெளியீட்டு நாளுக்காக காத்திருந்தேன். முதலில் வந்தது பாடல்கள். "ஒத்த சொல்லால" பாடல் மேலும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. சுருக்கமாக சொன்னால், தரமான தமிழ் சினிமா ஒன்றை எதிர்பார்த்தேன்.

ரசித்தது
  1. கதையின் களம், அது கையாளப்பட்ட விதம் - Amores Perros படத்தின் சாயல் இருந்தாலும் அதை அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். சேவல் சண்டை படத்தின் முக்கிய கருவாக இருந்தாலும், அதை ஒரு உவமையாகவே பயன்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். சண்டையிடும் சேவல்களுக்குள் எப்படி விரோதம் இல்லையோ, அதே போல் இறுதியில் சண்டையிடும் இரு கதாபாத்திரங்களுக்கும் உண்மையான விரோதம் கிடையாது. இரண்டுமே, மூன்றாம் மனிதன் ஒருவனின் சுயநலத்திற்காக நடத்தப்படும் வெறியாட்டமே இந்த ஆடுகளம். இரண்டாம் பாதியில் சேவல் சண்டை வாராதது சிலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அதுவே சரி என்று நான் வாதாடுவேன். இயக்குனர் சொல்ல வந்த உண்மையான கதையின் கரு இரண்டாம் பாதிதான், மனித புத்தியின் பல கோணங்கள்.  
  2. கதாபாத்திரங்களின் அழுத்தம் - எந்த ஒரு படம் நடிகனை கதாப்பதிரதிருக்கு பின் ஒளித்து வைக்கிறதோ அது நிச்சயம் வெற்றி பெரும். Punch dialogue சொல்லும் நேரம் தவிர்த்து மத்த இடங்களில் தனுஷ் என் கண்களுக்கு தெரியவே இல்லை. கே.பி.கருப்பு ஆகவே தெரிந்தார். அதே போலதான் துரை ஆகா நடித்திருக்கும் கிஷோர். பேட்டைக்காரர், ரத்தினவேலு கதாபாத்திரங்களும் பிரமாதம்.  
  3. விறுவிறுப்பான முதல் பாதி - இடைவேளை வந்ததே தெரியாமல் இருக்கும்படி முதல் பாதியை அமைத்துள்ளார் இயக்குனர். திரையரங்கே கைத்தட்டி பாராட்டியது. 
  4. "யாதே யாதே" "ஒத்த சொல்லால" பாடல்கள் படமாக்கிய விதம். புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், அழகாக இருந்தது. படத்தின் வேகத்தை கூட்டியது.
  5. சேவல் சண்டை - பிரம்மாண்டமாக Shankar அளவுக்கு படமாக்கப்படாமல் இருந்தாலும், முகம் சுழிக்க வைக்கவில்லை. இடைவேளையில் கைத்தட்டல் வந்ததிற்கான முக்கிய காரணம் இந்த சேவல் சண்டை. எப்படி இது கைத்தட்டல் வாங்கித் தந்ததோ, அதே போல் இரண்டாம் பாதியின் எதிர்ப்பார்ப்பை ஏற்றி விட்டது. 
  6. படம் முடிந்ததும், Filmography என்று இந்த படத்தை எடுக்க தூண்டிய படங்களை வருசை படுத்தி போட்டுள்ளார் வெற்றிமாறன். அநியாயமாக copy அடிக்கும் இந்த காலத்தில், நேர்மையாக (தேவையே இல்லை) அதை குறிப்பிட்டுள்ளது வெற்றிமாறனை ஒரு பக்குவ பட்ட இயக்குனராக காட்டுகிறது. இதுக்கு ஒரு சபாஷ்!!
ரசிக்கத் தவறியது
  1. மனதில் நிற்கும்படி வசனங்கள் ஏதும் இல்லை. மதுரை மொழி வழக்கு இல்லாதவன் நான். ஒரு வேலை அதுகூட காரணமாக இருக்கலாம். 
  2. பாடல்கள் அருமையாக இருந்தாலும், பின்னணி இசை அமைக்க இன்னும் G.V.Prakash-ku பயிற்சி தேவை. இளையராஜா, ரஹ்மான் போல் பின்னணி இசை அமைக்க இன்று இருக்கும் மற்ற இசையமைப்பாளர்களால்  முடியவில்லை என்பது தமிழ் சினிமாவிற்கு அவமானமே.
  3.  பொல்லாதவன் படத்தில் எனக்கு இருந்த அதே குறை இந்த படத்திலும் உண்டு. கதாநாயகி 3 பாடல்கள் மற்றும் 5 காதல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் வெற்றிமாறன். படத்தில் முக்கிய கதாபாத்திரம் இல்லாததுக்கூட  எனக்கு வருத்தம் இல்லை. முக்கியத்துவம் இருப்பதுபோல் trailer மட்டும் posters வெளியிட்டதே தவறு. 
என் பார்வையில் : தமிழ் சினிமாவை முன்னுக்கு தள்ளிச் செல்ல துடிக்கும் சிலரில் ஒருவரான வெற்றிமாறனுக்கு கிடைத்த வெற்றி பரிசு இந்த ஆடுகளம்.