பக்கங்கள்

டிசம்பர் 31, 2010

என் அழகிய ராட்சஷி, 2010!!!

விழா எடுத்து வரவேர்த்தேன்,
அழகாய் இடை அசைத்து வந்தாய்,
பின்பு வலிகள் கோடி தந்தாய்,
இறுதியில் ஒரு ஆசை முத்தமும் இட்டாய்,
முத்தமிட்ட இடத்தின் ஈரம் குறைவதற்குள் என்னை விட்டு செல்கிறாய்!!!
உன் இழப்பை நினைத்து வருந்தவா? அல்ல உன் தங்கை வருகையை நினைத்து மகிழவா? ;)

Vizha yeduththu varaverthaen,
azhagai yidai asaiththu vandhai,
pinbu valigal kodi thandhai,
irudhiyil oru aasai muththamum yittai!!
muththamitta yidaththin eeram kuraivadharkul ennai vittu selgindrai!!!
Un yizhappai ninaiththu varundhava? alla un thangai varugaiyai ninaiththu magizhava? ;)





டிசம்பர் 29, 2010

என் முன் நீ - en mun nee


நெற்றி வியர்க்க, உள்ளங்கை குளிர,
இதயத்துடிப்பு எகிற, சுவாச கணக்கு குறைய,
வார்த்தைகள் குழைய, இனிய ராகம் ஒன்று எங்கோ கேட்க, 
கண்ணிமைக்கும் அந்த ஒரு சிறு நொடியும் ஆயுள் தண்டனைபோல் வலிக்குதடி,
நீ என் முன் இருக்கையில்!!! 

Nettri viyarka, ullanggai kulira,
idhayathudippu yegira, suvaasa kanakku kuraiya,
vaarthaigal kuzhaiya, iniya raagam ondru engo ketka,
kannimaikkum andha oru siru nodiyum aayul dhandanaipol valikkudhadi,
nee en mun irukkaiyil!!!





டிசம்பர் 28, 2010

முத்தம் - Muththam

நான்கு ஒன்றாக,
இருபது இரண்டாக,
தானே இமைகள் மூட பகல் இரவாக,
வெட்கம் வெளியே ஓடியதே!!!
Naangu ondraaga,
irubadhu irandaaga,
thaane imaigal mooda pagal iravaaga,
vetkam veliye odiyadhu!!!
 




மறந்திடு - Marandhidu

நிம்மதியான வாழ்கை வாழ,
மறந்திடு...
முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்களை மட்டும் அல்ல,
சில அழகிய இனிய நினைவுகளையும் சேர்த்து!!!

Nimmadhiyaana vaazhkai vaazha,
marandhidu...
mugam suzhikka vaikkum sambavangalai mattum alla,
sila azhagiya iniya ninaivugalayum serththu!!!




டிசம்பர் 27, 2010

உன் பெயர் - un peyar

உன் பெயர் Numerology பார்த்து வைக்கவில்லை,
என் Neurology பார்த்து வைத்திருக்கிறான் என் மாமன்,
உன் பெயர் எவர் உச்சரித்தாலும் என் நரம்புகள் Noodles ஆகின்றது!!! 

un peyar Numerology paarththu vaikkavillai,
en Neurology paarththu vaiththirukkiran en maaman,
un peyar evar ucharithaalum en narambugal Noodles aagindradhu!!!




முகமுடி - Mugamudi

உனக்காக பல வருடங்கள் முகமுடி அணிந்தேன்...
இன்று,
முகமூடியே முகமாகியது,
மெய் முகமும் மறந்து போனது!!!


Unakkaaga pala varudangal mugamudi anindhaen....
indru,
mugamudi mugamaagiyadhu,
mei mugamum marandhu ponadhu!!!




சொப்பனம் - Soppanam

நித்தம்
வந்து நித்திரை
எரித்து சொப்பனம்
விதைக்கும் வித்தை
அறிந்தவள் நீ!!!

Niththam
vandhu niththirai
yeriththu soppanam
vidhaikkum viththai
arindhaval nee!!!




காதலும் விக்கலும் - Kaadhalum Vikkalum

காதலும் விக்கலும்,
நாம் கேட்டு வருவதில்லை,
மூச்சை நிறுத்தியும் போவதில்லை!!!

kaadhalum vikkalum,
naam kettu varuvadhillai,
moochai niruththiyum povadhillai!!!