தாய் மடியில் தலை சாய்க்க,
அவளும் மெதுவாய் நம் தலை கோத,
இருபத்தைந்து வருடமாகியும்
இன்றும் மாறாத அவள் புடவை வாசனையில் மனம் மயங்க,
மின்சாரம் இடையே போன உடன்
ஓரமாய் உட்காந்து ஓலை விசிறியால் தந்தை விசிறிவிட,
அவன் கட்டை குரலில், மொக்கை பாடல் ஒன்றை பாட
வரும் அந்த ஆனந்த தூக்கம்,
நான்காயிரம் கொடுத்து வாங்கிய பஞ்சு மெத்தையில்,
split A/C-இன் குளுகுளு காற்றில்,
iPod-இல் ரஹ்மான் பாடல்கள் ஒலிக்க,
மாத்திரை பல விழுங்கியும் எளிதில் வருவதில்லை!!! இருப்பினும் மனிதன் மாறுவதில்லை!!!
thaai madiyil thalai saaikka,
avalum medhuvai nam thalai kodha,
irubaththaindhu varudamaagiyum
indrum maaradha aval pudavai vaasanaiyil manam mayanga,
minsaaram idaiye pona udan
oramai utkaandhu olai visiriyaal thandhai visirivida,
avan kattai kuralil, mokkai paadal ondru paada v
arum andha aanandha thookkam,
naangaayiram koduththu vaangiya panju meththaiyil,
split A/C-in kulukulu kaatril,
ipod-il Rahman paadalgal olikka,
maaththiraigal pala vizhungiyum yelidhil varuvadhillai!!!
iruppinum manidhan maaruvadhillai!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக