என் இடுகையில் குறிப்பிட்டது போல, கடந்த சில நாட்களாய் என் ipod-ல் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் "கோ" திரைப்படத்தில் வரும் "என்னமோ ஏதோ / குவியமில்லா".
இந்த பாடலை பற்றி எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆகையால் இதோ என்னுடைய முதல் பாடல் விமர்சனம்....

படம் : கோ
இயக்கம் : K.V. ஆனந்த்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : மதன் கார்க்கி
இசை
இனிய பாடல்கள் அமைப்பது ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல் அந்நிய பாப் பாடல்கள் சிலவற்றை தழுவியே இசை அமைத்துள்ளார். இங்கு நான் புகார் பண்ணுவதாக நினைக்க வேண்டாம். "சுட்ட பழமாக இருந்தால் என்ன? சுவையாக இருந்தால் போதும்!!" என்ற புதுமொழி படி வாழ்பவன் நான்.
குரல் / பாடிய விதம்
ஆலாப் ராசு மிக அருமையாக பாடியுள்ளார். குரல் வசீகரமாக உள்ளது. பாப் பாடகர் Akon போல பாட முயன்றிக்கிறார், அதை அழகாவும் செய்திருக்கிறார். பாடல் நடுவில் வரும் Rap கொஞ்சம் எரைச்சலாகவே உள்ளது.
பாடல் வரிகள்
நான் இந்த விமர்சனம் எழுதுவதற்கான முக்கிய காரணமே இந்த பாடலில் வரும் வரிகள் தான். அழகான வார்த்தைகளை பயன்படுத்தி அருமையாக உணர்ச்சிகளை பின்னி இருக்கிறார் மதன் கார்க்கி. பாடல் வரிகளை படிக்க இங்கு செல்லவும்.
என்னை மிகவும் கவர்ந்த சில வரிகள்,

- குவியமில்லா ஒரு காட்ச்சிப் பேழை - படத்தின் கதாநாயகன் நிழல் படம் எடுப்பவர். அதற்க்கு பொருந்த இந்த வரிகளை எழுதியுள்ளார் கார்க்கி. இப்படி பல technical வார்த்தைகளை பொருத்தமாக பயன்படுத்துவதில் வல்லவர் என்று அவர் முன்பே எந்திரன் படம் பாடல்கள் வழியாக நிருபித்துள்ளார்.
- ஏதோ அரைமனதாய் விடியுது என் காலை
- நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும், அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்.
- நிழலை திருடும் மழலை நானோ - எனக்கு மிகவும் பிடித்த வரி இதுதான் :)
பின் குறிப்பு: கோ பட பாடல்களை கேட்க paadal.com செல்லவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக