பக்கங்கள்

ஜனவரி 31, 2011

பின் புத்தி ? - pin puththi ?

முதலிரவில், அவள் கொடுத்த
முதல் முத்தத்தின் பசையில்,
உதடுகள் ஒட்டியது - இன்றும்
கேள்வி கேட்க முடியாமல் வாய்
மூடியே கிடக்கிறது!
பெண் புத்தி பின் புத்தி என்று சொன்ன மேதை எவனடா ?

mudhaliravil, aval kodutha
mudhal muththathin pasayil,
udhadugal ottiyadhu - indrum
kelvi ketka mudiyaamal vaai
moodiye kidakkiradhu!
pen puththi pin puththi endru sonna medhai evanadaa ?






ஜனவரி 27, 2011

ஆற விடாதே - aara vidaadhe

கையில் இருப்பது
அமுதா விஷமா என்று
குழம்பிய நேரத்தில்,
அது ஆவியானது,
நுரைமட்டுமே மிஞ்சியது!!!

kaiyil irunppadhu
amudha vishama endru
kuzhambiya neraththil,
adhu aaviyaanadhu,
nurai mattume minjiyadhu!!!





ஜனவரி 23, 2011

நிலாக் காதல் - Nilaa Kaadhal

தினம் ஒரு புது நிலவு வருவதுமில்லை,
மறைந்த நிலவு மறுநாள் வராமல் போவதுமில்லை,
தினம் அது வந்தாலும், என்றும் நம் கை வந்து சேர்வதுமில்லை,
கைப்பற்ற துடித்து செல்பவன் காலடியில் மட்டுமே அது கிடக்கும் !
புரிகிறதா, ஏன் காதல் நிலவோடு ஒப்பிடப் படுகிறதென்று?


thinam oru pudhu nilavu varuvadhumillai,
maraindha nilavu marunaal varaamal povadhumillai,
thinam adhu vandhaalum, endrum nam kai vandhu servadhumillai,
kaipattra thudiththu selbavan kaaladiyil mattume adhu kidaikkum !
pugiradha, ean kaadhal nilavodu oppida padugiradhendru?






ஜனவரி 22, 2011

கவிதை மேட் ஈசி - kavidhai made easy

கற்பனை தீட்டி கவி ஈட்டும் கவிஞர்களே, ரகசியம் கேளுங்கள்!!!

மனதில் இருப்பதை அப்படியே கிறுக்குங்கள்...
பொருள் பிழையும் உவமையாகும்,
சந்திப்பிழையும் அணி சேர்க்கும்!!!

எழுதிய வரிகளை சரிப்பார்க்காதீர்கள்...
முடிக்காத சில வரிகள் வினாவாகும்,
அதுவே சிலருக்கு விடையும் தரும்!!!

உண்மை உணர்ச்சிகளை உதிரியாக்கி மாலை பின்னுங்கள்...
வாலியும் வாயடைத்து நிற்பான்,
வைரமுத்துவும் வயிறு எரிந்து போவான்!!!







ஜனவரி 20, 2011

என் செவி வழியே "என்னமோ ஏதோ" - en sevi vazhiye "ennamo edho"

என் இடுகையில் குறிப்பிட்டது போல, கடந்த சில நாட்களாய் என் ipod-ல் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் "கோ" திரைப்படத்தில் வரும் "என்னமோ ஏதோ / குவியமில்லா".

இந்த பாடலை பற்றி எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆகையால் இதோ என்னுடைய முதல் பாடல் விமர்சனம்....




படம் : கோ
இயக்கம் : K.V. ஆனந்த்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : மதன் கார்க்கி

இசை
இனிய பாடல்கள் அமைப்பது ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல் அந்நிய பாப் பாடல்கள் சிலவற்றை  தழுவியே இசை அமைத்துள்ளார். இங்கு நான் புகார் பண்ணுவதாக நினைக்க வேண்டாம். "சுட்ட பழமாக இருந்தால் என்ன? சுவையாக இருந்தால் போதும்!!" என்ற புதுமொழி படி வாழ்பவன் நான்.

குரல் / பாடிய விதம்
ஆலாப் ராசு மிக அருமையாக பாடியுள்ளார். குரல் வசீகரமாக உள்ளது. பாப் பாடகர் Akon போல பாட முயன்றிக்கிறார், அதை அழகாவும் செய்திருக்கிறார். பாடல் நடுவில் வரும் Rap கொஞ்சம் எரைச்சலாகவே உள்ளது.

பாடல் வரிகள்
நான் இந்த விமர்சனம் எழுதுவதற்கான முக்கிய காரணமே இந்த பாடலில் வரும் வரிகள் தான். அழகான வார்த்தைகளை பயன்படுத்தி அருமையாக உணர்ச்சிகளை பின்னி இருக்கிறார் மதன் கார்க்கி. பாடல் வரிகளை படிக்க இங்கு செல்லவும்.

என்னை மிகவும் கவர்ந்த சில வரிகள்,

  1. குவியமில்லா ஒரு காட்ச்சிப் பேழை - படத்தின் கதாநாயகன் நிழல் படம் எடுப்பவர். அதற்க்கு பொருந்த இந்த வரிகளை எழுதியுள்ளார் கார்க்கி. இப்படி பல technical வார்த்தைகளை பொருத்தமாக பயன்படுத்துவதில் வல்லவர் என்று அவர் முன்பே எந்திரன் படம் பாடல்கள் வழியாக நிருபித்துள்ளார். 
  2. ஏதோ அரைமனதாய் விடியுது என் காலை 
  3. நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும், அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்.
  4. நிழலை திருடும் மழலை நானோ - எனக்கு மிகவும் பிடித்த வரி இதுதான் :)
பின் குறிப்பு: கோ பட பாடல்களை கேட்க paadal.com செல்லவும்




ஜனவரி 18, 2011

என்னமோ ஏனோ - ennamo yeno

நேற்று இரவு முதல் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல், "கோ" படத்தின் "என்னமோ ஏனோ" பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதன் கார்க்கியின் வரிகள் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. அந்த பாடலுக்கு என்னுடிய இந்த வரிகள் சமர்ப்பணம்! :)

என்னமோ ஏனோ
நத்தை நகருது பகலில்,
பித்தம் பிடிக்குது இரவில்,
முத்தம் பறக்குது கனவில்!!!

என்னமோ ஏனோ
விழி பிதுங்குது உன் அழகில்,
இரத்தம் உறையுது உன் குரலில்,
உயிர் கசியுது உன் இதழில்!!!

ennamo yeno
naththai nagarudhu pagalil,
piththam pidikkudhu iravil,
muththam parakkudhu kanavil!!!

ennamo yeno
vizhi pidhunggudhu un azhagil,
raththam uraiyudhu un kuralil,
uyir kasiyudhu un yidhazhil!!!




ஜனவரி 16, 2011

என் பார்வையில் "ஆடுகளம்" - Aadukalam

இதுவே என்னுடைய முதல் சினிமா விமர்சனம்.


படம்: ஆடுகளம்
இயக்கம்: வெற்றிமாறன்
தயாரிப்பு: கதிரேசன்
இசை: G.V.பிரகாஷ்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
நடிப்பு: தனுஷ், தாப்சீ பண்ணு, கிஷோர் 


எதிர்பார்ப்பு
சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல், நேரம் கழிப்பதற்க்காக நண்பனோடு நான் பார்த்த படம் "பொல்லாதவன்". படத்தை பார்த்து மிரண்டு போனேன். வெற்றிமாறன் மீது பெரிய மரியாதை வந்தது. அதே கூட்டணி வழங்கிய அடுத்த படம்தான் இந்த ஆடுகளம். படம் எடுக்க ஆரம்பித்த நாள் முதல் நான் பட வெளியீட்டு நாளுக்காக காத்திருந்தேன். முதலில் வந்தது பாடல்கள். "ஒத்த சொல்லால" பாடல் மேலும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. சுருக்கமாக சொன்னால், தரமான தமிழ் சினிமா ஒன்றை எதிர்பார்த்தேன்.

ரசித்தது
  1. கதையின் களம், அது கையாளப்பட்ட விதம் - Amores Perros படத்தின் சாயல் இருந்தாலும் அதை அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். சேவல் சண்டை படத்தின் முக்கிய கருவாக இருந்தாலும், அதை ஒரு உவமையாகவே பயன்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். சண்டையிடும் சேவல்களுக்குள் எப்படி விரோதம் இல்லையோ, அதே போல் இறுதியில் சண்டையிடும் இரு கதாபாத்திரங்களுக்கும் உண்மையான விரோதம் கிடையாது. இரண்டுமே, மூன்றாம் மனிதன் ஒருவனின் சுயநலத்திற்காக நடத்தப்படும் வெறியாட்டமே இந்த ஆடுகளம். இரண்டாம் பாதியில் சேவல் சண்டை வாராதது சிலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அதுவே சரி என்று நான் வாதாடுவேன். இயக்குனர் சொல்ல வந்த உண்மையான கதையின் கரு இரண்டாம் பாதிதான், மனித புத்தியின் பல கோணங்கள்.  
  2. கதாபாத்திரங்களின் அழுத்தம் - எந்த ஒரு படம் நடிகனை கதாப்பதிரதிருக்கு பின் ஒளித்து வைக்கிறதோ அது நிச்சயம் வெற்றி பெரும். Punch dialogue சொல்லும் நேரம் தவிர்த்து மத்த இடங்களில் தனுஷ் என் கண்களுக்கு தெரியவே இல்லை. கே.பி.கருப்பு ஆகவே தெரிந்தார். அதே போலதான் துரை ஆகா நடித்திருக்கும் கிஷோர். பேட்டைக்காரர், ரத்தினவேலு கதாபாத்திரங்களும் பிரமாதம்.  
  3. விறுவிறுப்பான முதல் பாதி - இடைவேளை வந்ததே தெரியாமல் இருக்கும்படி முதல் பாதியை அமைத்துள்ளார் இயக்குனர். திரையரங்கே கைத்தட்டி பாராட்டியது. 
  4. "யாதே யாதே" "ஒத்த சொல்லால" பாடல்கள் படமாக்கிய விதம். புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், அழகாக இருந்தது. படத்தின் வேகத்தை கூட்டியது.
  5. சேவல் சண்டை - பிரம்மாண்டமாக Shankar அளவுக்கு படமாக்கப்படாமல் இருந்தாலும், முகம் சுழிக்க வைக்கவில்லை. இடைவேளையில் கைத்தட்டல் வந்ததிற்கான முக்கிய காரணம் இந்த சேவல் சண்டை. எப்படி இது கைத்தட்டல் வாங்கித் தந்ததோ, அதே போல் இரண்டாம் பாதியின் எதிர்ப்பார்ப்பை ஏற்றி விட்டது. 
  6. படம் முடிந்ததும், Filmography என்று இந்த படத்தை எடுக்க தூண்டிய படங்களை வருசை படுத்தி போட்டுள்ளார் வெற்றிமாறன். அநியாயமாக copy அடிக்கும் இந்த காலத்தில், நேர்மையாக (தேவையே இல்லை) அதை குறிப்பிட்டுள்ளது வெற்றிமாறனை ஒரு பக்குவ பட்ட இயக்குனராக காட்டுகிறது. இதுக்கு ஒரு சபாஷ்!!
ரசிக்கத் தவறியது
  1. மனதில் நிற்கும்படி வசனங்கள் ஏதும் இல்லை. மதுரை மொழி வழக்கு இல்லாதவன் நான். ஒரு வேலை அதுகூட காரணமாக இருக்கலாம். 
  2. பாடல்கள் அருமையாக இருந்தாலும், பின்னணி இசை அமைக்க இன்னும் G.V.Prakash-ku பயிற்சி தேவை. இளையராஜா, ரஹ்மான் போல் பின்னணி இசை அமைக்க இன்று இருக்கும் மற்ற இசையமைப்பாளர்களால்  முடியவில்லை என்பது தமிழ் சினிமாவிற்கு அவமானமே.
  3.  பொல்லாதவன் படத்தில் எனக்கு இருந்த அதே குறை இந்த படத்திலும் உண்டு. கதாநாயகி 3 பாடல்கள் மற்றும் 5 காதல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் வெற்றிமாறன். படத்தில் முக்கிய கதாபாத்திரம் இல்லாததுக்கூட  எனக்கு வருத்தம் இல்லை. முக்கியத்துவம் இருப்பதுபோல் trailer மட்டும் posters வெளியிட்டதே தவறு. 
என் பார்வையில் : தமிழ் சினிமாவை முன்னுக்கு தள்ளிச் செல்ல துடிக்கும் சிலரில் ஒருவரான வெற்றிமாறனுக்கு கிடைத்த வெற்றி பரிசு இந்த ஆடுகளம். 




என் பார்வையில் சினிமா - en paarvaiyil cinema

பல வருடங்களாக தமிழ் மற்றும் அண்டைய மொழி திரைப்படங்களை நண்பர்களிடையே விமர்சனம் செய்துக்கொண்டிருக்கும் நான், முதல் முறையாக என் இணையதளத்தில் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்துள்ளேன். நான் ஒரு சராசரி திரைப்பட ரசிகன்தான். என் விமர்சனம் ஓர வஞ்சனையோடு இருக்கலாம். மாற்றுக்கருத்து இருந்தால் comments section-ல் பதிவு செய்யவும்.




புல் மீல்ஸ் - full meals

சோற்றால் மலை கட்ட,
குழம்பால் அதை குளிப்பாட்ட,
உள்ளங்கையால் அதை பிசைய,
பொரியல் தப்பி ஓடும் விரல் இடுக்கே...

முழங்கை வழியே மோர் ஒழுக,
மலை வாழை இரண்டு உள்ளே நழுவ,
வெற்றிலையும் சுண்ணாம்பும் வாய் மணக்கும்,
இருப்பினும் வயிற்றில் இன்னும் இடம் இருக்கும்...

இன்று,
நுனி விரலால் இலையில் ஓவியம் வரைய,
பருக்கை பருக்கையாய் வெறும் சோறு உள்ளே இறங்க,
குழம்பை மறந்து நேராக சென்றேன் தயிருக்கு,
அதுவும் உள்ளே இறங்க மறுக்க உண்டு முடித்தேன் வெந்நீரோடு...
இதயத்தில் நின்று ஏண்டி இப்படி ஹிம்ச தர?!?!

sotraal malai katta,
kuzhambaal adhai kulippaatta,
ullangaiyaal adhai pisaiya,
poriyal thappi odum viral yidukke...

muzhanggai vazhiye mor ozhuga,
malai vaazhai yirandu ulle nazhuva,
vettrilaiyum sunnaambum vaai manakkum,
yiruppinum vayatril innum yidam irukkum...

indru,
nuni viralaal yilaiyil oviyam varaiya,
parukkai parukkaiyaai verum soru ulle yiranga,
kuzhambai marandhu neraga sendraen thayirukku,
adhum ulle yiranga marukka undu mudithaen venneerodu...
idhayathil nindru eandi ippadi himsai thara?!?!?!




காதல் சிசு - kaadhal sisu

அவளிடம் நடப்பை காக்க நட்புறை அணிந்தான்,
அழுத்தம் தாங்காமல் உறை கிழிய,
விந்துகள் பாய்ந்தது,
காதல் சிசுவும் உருவானது,
ஆண் கர்ப்பம் ஆகும் கூத்து காதலில் மட்டும்தான்,
இக்காலத்திலும் சிசுக் கொலை நடப்பது இங்கு மட்டும்தான்!!!

avalidam natppai kaakka natppurai anindhaan,
azhuththam thaangaamal urai kizhiya,
vindhugal paaindhadhu,
kaadhal sisuvum uruvaanadhu,
aan karppam aagum kooththu kaadhalil மட்டும்தான்,
yikkaalaththilum sisu kolai nadappadhu ingu mattumdhan!!!




ஜனவரி 14, 2011

காதல் பொங்கலோ பொங்கல் - kaadhal pongalo pongal

பழைய ஞாபகங்கள் எரித்து விட்டேன்,
புதிய ஆசைகளை புகுத்தி விட்டேன்,
பயம் என்னும் காளையை அடக்கி விட்டேன்,
உன்னை காணும் நாள் தேடி காத்திருக்கின்றேன்!!!
என் மனதில், காதல் பொங்கலோ பொங்கல்!!!

pazhaiya nyabagangal yeriththu vittaen,
pudhiya aasaigal puguththi vittaen,
bayam ennum kaalaiyai adakki vittaen,
unnai kaanum naal thedi kaaththirukkindraen!!!
en manadhil, KAADHAL PONGALO PONGAL!!!!




கூசுதடி கூவையிலே - koosudhadi koovayile


ஈறு வரை இறங்கிய சொத்தைப் பல்லும் சுகமாய் கூசுதடி, 
உன் மந்திர பெயரை கூச்சலிட்டு கூவையிலே...
குழவி புகுந்த காதும் குளுகுளு என்றானதடி,
உன் கொஞ்சல் வார்த்தைகள் கோர்வையாய் கேட்கையுலே...
பணியால் வெடித்த உதடு மட்டும் என்ன பாவம் செய்ததடி,
இப்படி தனிமையில் வாடவிட்டு வேடிக்கை பார்க்கின்றாய்?!?!?

eeru varai yirangiya soththai pallum sugamai koosudhadi,
un mandhira peyarai koochalittu koovayile...
kuzhavi pugundha kaadhum kulukulu endranadhadi,
un konjal vaarthaigalai korvaiyaai ketkaiyule...
paniyaal vediththa udhadu mattum enna paavam seidhadhadi,
ippadi thanimayil vaadavittu vedikkai paarkkindraai?!?!?




மோசடி - mosadi

கலவி பின்பு மோசடி
அவள் பாதிக்கப் பட்டாள்,
அவன் தண்டிக்கப் பட்டான்...
காதல் பின்பு மோசடி
அவன் பாதிக்கப் பட்டான்,
அவனே தண்டிக்கவும் பட்டான்!!!

kalavi pinbu mosadi
aval baadhikka pattaal,
avan dhandikka pattaan...
kaadhal pinbu mosadi
avan baadhikka pattaan,
avane dhandikkavum pattaan!!!




ஜனவரி 12, 2011

இலக்கணம் மாறுமோ? - yilakkanam maarumo?

உன் பெயர் பகுதியாக,
என் பெயர் விகுதியாக,
காதல் சந்தியாக,
நாம் பகாப்பதம் ஆனோம்,
தமிழ் இலக்கணம் பொய்யானது!!!

un peyar pagudhiyaaga, 
en peyar vigudhiyaaga, 
kaadhal sandhiyaaga, 
naam pagaapadham aanom, 
tamiz yilakkanam poiyaanadhu!!!





ஜனவரி 11, 2011

உடல் மண்ணுக்கு, உயிர் யாருக்கு? - udal mannukku, uyir yaarukku?




அன்று
பற்கள் இளிக்கவைத்தாய்,
பருக்கள் மின்னவைத்தாய்,
உட் சுரப்பு நீரை உசிப்பேத்திவிட்டாய்,
மொத்த இரத்தத்தையும் மூளைக்கு ஏற்றிவிட்டாய்,
ஏனடி என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டாய்?!?!?
இன்று 
நுரையீரல்  கருக வைத்தாய்,
கல்லீரல் வீங்க வைத்தாய்,
நரம்பு தளர வைத்தாய்,
இரத்தம் கொதிக்க வைத்தாய்,
ஏனடி என் இதயத்தை நசுக்கி விட்டாய்?!?!?!

andru
parkkal yilikka vaithaai,
parukkal minna vaithaai,
ut surappu neerai usupethivittaai,
moththa rathathaiyum moolaiku yetrivittai,
eannadi orakkannaal ennai paarthuvittaai?!?!?!
indru
nuraiyeeral karugavaithaai,
kalleeral veenga vaithaai,
narambu thalara vaithaai,
raththam kodhika vaithaai,
eannadi en idhayaththai nasukkivittai?!?!?!





ஜனவரி 10, 2011

வாக்குமூலம் - vaakkumoolam

நான் 
உண்மை கவிஞன் அல்ல,
படைப்பாளி அல்ல,
தானாக எதுவும் சிந்தித்ததும் அல்ல,
தமிழ் மொழியில் வல்லவனும் அல்ல.
கவிஞன் ஒருவனின் தாக்கத்தால் இப்படி ஆனேன்,
அவன் எழுதிய ஒரே கவிதையை பாராட்டி, பல நகல்கள் போட்டு மகிழ்கிறேன்!!!
நன்றி பிரம்மனே!!!

Naan
unmai kavignan alla,
padaipaali alla,
thaanaga edhuvum sindhiththadhum alla,
tamiz mozhiyil vallavanum alla...
kavignan oruvanin thaakkaththaal ippadi aanaen,
avan ezhudhiya ore kavidhaiyai paarati, pala nagalgal pottu magizgiraen!!!
nandri brammane!!!




ஜனவரி 09, 2011

அற்ப ஆசை - arpa aasai

என் மனதை கிழித்து,
உயிரை எரித்த பின்பும் 
அவள் திருமனத்திருக்கு சென்றேன்,
வாழ்த்து கூற அல்ல,
அவை நாகரீகம் அறிந்து அங்காவது 
என்னை பார்த்து சிரிக்கமாடாளா என்ற அற்ப ஆசையில்தான்!!!

en manadhai kizhiththu,
uyirai yeriththa pinbum 
aval thirumanaththirukku sendraen,
vaazthu koora alla,
avai naagareegam arindhu angaavadhu
ennai paarthu sirikkamaataalaa endra arpa aasaiyildhaan!!




வ - va

அன்பே,
cutting-ஆய் நான் இருந்தேன்,
soda-வாக நீ வந்தாய்,
நீ இல்லாமல் glass நிறைவதில்லை,
நான் இல்லாமல் உனக்கு மரியாதை இல்லை,
நாம் இணையாமல் எவருக்கும் சந்தோஷமே இல்லை!!!

Anbe,
cutting-aai naan irundhaen,
soda-vaaga nee vandhai,
nee illamal glass niraivadhillai,
naan illamal unakku mariyaadhai illai,
naam yinaiyaamal evarukkum sandhoshame illai!!!




தூக்கம் என்ன விலை? - Thookkam enna vilai?


தாய் மடியில் தலை சாய்க்க,
அவளும் மெதுவாய் நம் தலை கோத,
இருபத்தைந்து வருடமாகியும் 
இன்றும் மாறாத அவள் புடவை வாசனையில் மனம் மயங்க,
மின்சாரம் இடையே போன உடன் 
ஓரமாய் உட்காந்து ஓலை விசிறியால் தந்தை விசிறிவிட,
அவன் கட்டை குரலில், மொக்கை பாடல் ஒன்றை பாட 
வரும் அந்த ஆனந்த தூக்கம்,
நான்காயிரம் கொடுத்து வாங்கிய பஞ்சு மெத்தையில், 
split A/C-இன் குளுகுளு காற்றில்,
iPod-இல் ரஹ்மான் பாடல்கள் ஒலிக்க,
மாத்திரை பல விழுங்கியும் எளிதில் வருவதில்லை!!! இருப்பினும் மனிதன் மாறுவதில்லை!!!


thaai madiyil thalai saaikka, 
avalum medhuvai nam thalai kodha, 
irubaththaindhu varudamaagiyum 
indrum maaradha aval pudavai vaasanaiyil manam mayanga, 
minsaaram idaiye pona udan 
oramai utkaandhu olai visiriyaal thandhai visirivida, 
avan kattai kuralil, mokkai paadal ondru paada v
arum andha aanandha thookkam, 
naangaayiram koduththu vaangiya panju meththaiyil, 
split A/C-in kulukulu kaatril, 
ipod-il Rahman paadalgal olikka, 
maaththiraigal pala vizhungiyum yelidhil varuvadhillai!!! 
iruppinum manidhan maaruvadhillai!!!




ஜனவரி 08, 2011

ஒரு நொடி - Oru Nodi

பேசும் பொழுது உரிமையோடு da போட்டாய்,
திரை அரங்கில் பாடல் முடிந்ததும் எழுப்பி விடு சொல்லி என் மீது தலை சாய்ந்து இமை மூடினாய்,
புகைப்படம் எடுக்கையில் பாசமாய் தோள்மீது கை போட்டாய்,
சாலை கடக்கையில் குழந்தை போல் என் கையை இருக்கி பிடித்தாய்,
நீதான் உலக அழகி என்று பொய் சொல்லிய பொழுது வெட்கத்துடன் என்னை தள்ளி விட்டாய்,
இதையெல்லாம் என் மற்ற தோழிகள் செய்தபொழுது ஒன்றும் தோன்றாத எனக்கு,
நீ செய்யும் வேளையில் மட்டும், இதயம் வயருவரை ஒரு நொடி இறங்கி ஏறுதடி! இதுதான் காதலா?!?!

Pesum pozhudhu urimaiyudan 'da' pottaai, 
thirai arangil paadal mudindhadhum ezhuppi vida solli en meedhu thalai saaindhu yimai moodinaai, 
pugaipadam edukkaiyil paasamaai thol meedhu kai pottaai, 
saalai kadakkaiyil kuzhandhai pol en kaiyai irukki pidiththaai, 
needhan ulaga azhagi endru poi solliya pozhudhu vetkaththudan ennai thalli vittaai, idhaiyellam en matra thozhigal seidhapozhudhu ondrum thondraadha enakku, 
nee seiyum velaiyil mattum, idhayam vayaru varai oru nodi yirangi yerudhadhi! idhudhan kaadhala?!?!




தவறான நேரம் - Thavaraana Neram

தவறான நேரத்தில் சரியான நபர் மீது காதல் தோன்றுவது,
கீழே இறங்கும் Escalator-இல் மேலே ஏற முயற்சிப்பது போன்று.
ங்கொய்யால ஒன்னும் பண்ண முடியாது... நடுவுலயே நிக்க வேண்டியதுதான்!!! 


Thavaraana neraththil sariyaana nabar meedhu kaadhal thondruvadhu,
keezhey irangum Escalator-il mela yera muyarchippadhu pondru. 
goyaala, onnum panna mudiyadhu... naduvulaye nikka vendiyadhudhan!!!




ஜனவரி 06, 2011

காதல் வகைகள் - Kaadhal Vagaigal

வெற்றி பெற்ற காதல் திருமணத்தில் முடிகிறது,
தோல்வி அடைந்த காதல் அடுத்த காதலாய் மாறுகிறது,
வீரனின் காதல் பெண்ணின் அண்ணன் சட்டையை பிடிக்கிறது,
கோழையின் காதல் Drafts folder-ல் அனுப்பாத email ஆகவே இருக்கிறது!!!

Vettri pettra kaadhal thirumanathil mudigiradhu, 
tholvi adaindha kaadhal adutha kaadhalaai maarugiradhu, 
veeranin kaadhal pennin annan sattaiyai pidikkiradhu,
kozhaiyin kaadhal Drafts Folder-il anupaadha email-aagave irukkiradhu!!!





ஜனவரி 05, 2011

தன்மானம் & காதல் - thanmaanam & kaadhal

தன்மானம் - காதல், 
இரண்டையும் 
வென்றவர் யாரும் இல்லை,
இழந்தவர் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை!!!

Thanmaanam - Kaadhal,
irandaiyum
vendravar yaarum illai,
yizhandhavar uyir vaazhvadhil artham illai!!!




ஜனவரி 04, 2011

உண்டா? இல்லையா? - undaa? illaiya?



அவள் அவனோட பேசுகையில் 
பொறாமை உண்டு வேதனை இல்லை,
ஒன்றாய் சேர்ந்து வாழ
ஆசை உண்டு அவசரம் இல்லை,
நான் நினைப்பதை எடுத்துக்  கூற 
தயக்கம் உண்டு பயம் இல்லை,
இப்படி துடிக்கும் என் இதையத்தில்  
காதல் உண்டா இல்லையா என்று அறிய வழி இல்லையே சர்வேசா!!!

aval avanodu pesugaiyil
poraamai undu vedhanai illai,
ondraai serndhu vaazha
aasai undu avasaram illai,
naan ninaippadhai yeduththu koora
thayakkam undu bayam illai,
ippadi thudikkum en idhayaththil
kaadhal undaa illaiya endru ariya vazhi illaiye sarvesaa!!!




ஜனவரி 02, 2011

தொலைந்தது - Tholaindhadhu


கையில் வைத்துக்கொண்டே மூக்கு கண்ணாடியை தேடிய கிழவன்போல்,
தொலையாத என் இதையத்தை தேடி அலைந்தேன்,
இன்று தொலைந்தது என்னவோ என் வாலிபம் மட்டும்தான்!!!

kaiyil vaithukonde mookku kannadiyai thediya kizhavanpol,
tholaiyaadha en idhayathai thedi alaindhaen,
indru tholaindhadhu ennavo en vaalibam mattumdhan!!!