படம்: ஆடுகளம் இயக்கம்: வெற்றிமாறன் தயாரிப்பு: கதிரேசன் இசை: G.V.பிரகாஷ் ஒளிப்பதிவு: வேல்ராஜ் நடிப்பு: தனுஷ், தாப்சீ பண்ணு, கிஷோர் |
சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல், நேரம் கழிப்பதற்க்காக நண்பனோடு நான் பார்த்த படம் "பொல்லாதவன்". படத்தை பார்த்து மிரண்டு போனேன். வெற்றிமாறன் மீது பெரிய மரியாதை வந்தது. அதே கூட்டணி வழங்கிய அடுத்த படம்தான் இந்த ஆடுகளம். படம் எடுக்க ஆரம்பித்த நாள் முதல் நான் பட வெளியீட்டு நாளுக்காக காத்திருந்தேன். முதலில் வந்தது பாடல்கள். "ஒத்த சொல்லால" பாடல் மேலும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. சுருக்கமாக சொன்னால், தரமான தமிழ் சினிமா ஒன்றை எதிர்பார்த்தேன்.
ரசித்தது
- கதையின் களம், அது கையாளப்பட்ட விதம் - Amores Perros படத்தின் சாயல் இருந்தாலும் அதை அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். சேவல் சண்டை படத்தின் முக்கிய கருவாக இருந்தாலும், அதை ஒரு உவமையாகவே பயன்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். சண்டையிடும் சேவல்களுக்குள் எப்படி விரோதம் இல்லையோ, அதே போல் இறுதியில் சண்டையிடும் இரு கதாபாத்திரங்களுக்கும் உண்மையான விரோதம் கிடையாது. இரண்டுமே, மூன்றாம் மனிதன் ஒருவனின் சுயநலத்திற்காக நடத்தப்படும் வெறியாட்டமே இந்த ஆடுகளம். இரண்டாம் பாதியில் சேவல் சண்டை வாராதது சிலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அதுவே சரி என்று நான் வாதாடுவேன். இயக்குனர் சொல்ல வந்த உண்மையான கதையின் கரு இரண்டாம் பாதிதான், மனித புத்தியின் பல கோணங்கள்.
- கதாபாத்திரங்களின் அழுத்தம் - எந்த ஒரு படம் நடிகனை கதாப்பதிரதிருக்கு பின் ஒளித்து வைக்கிறதோ அது நிச்சயம் வெற்றி பெரும். Punch dialogue சொல்லும் நேரம் தவிர்த்து மத்த இடங்களில் தனுஷ் என் கண்களுக்கு தெரியவே இல்லை. கே.பி.கருப்பு ஆகவே தெரிந்தார். அதே போலதான் துரை ஆகா நடித்திருக்கும் கிஷோர். பேட்டைக்காரர், ரத்தினவேலு கதாபாத்திரங்களும் பிரமாதம்.
- விறுவிறுப்பான முதல் பாதி - இடைவேளை வந்ததே தெரியாமல் இருக்கும்படி முதல் பாதியை அமைத்துள்ளார் இயக்குனர். திரையரங்கே கைத்தட்டி பாராட்டியது.
- "யாதே யாதே" "ஒத்த சொல்லால" பாடல்கள் படமாக்கிய விதம். புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், அழகாக இருந்தது. படத்தின் வேகத்தை கூட்டியது.
- சேவல் சண்டை - பிரம்மாண்டமாக Shankar அளவுக்கு படமாக்கப்படாமல் இருந்தாலும், முகம் சுழிக்க வைக்கவில்லை. இடைவேளையில் கைத்தட்டல் வந்ததிற்கான முக்கிய காரணம் இந்த சேவல் சண்டை. எப்படி இது கைத்தட்டல் வாங்கித் தந்ததோ, அதே போல் இரண்டாம் பாதியின் எதிர்ப்பார்ப்பை ஏற்றி விட்டது.
- படம் முடிந்ததும், Filmography என்று இந்த படத்தை எடுக்க தூண்டிய படங்களை வருசை படுத்தி போட்டுள்ளார் வெற்றிமாறன். அநியாயமாக copy அடிக்கும் இந்த காலத்தில், நேர்மையாக (தேவையே இல்லை) அதை குறிப்பிட்டுள்ளது வெற்றிமாறனை ஒரு பக்குவ பட்ட இயக்குனராக காட்டுகிறது. இதுக்கு ஒரு சபாஷ்!!
ரசிக்கத் தவறியது
- மனதில் நிற்கும்படி வசனங்கள் ஏதும் இல்லை. மதுரை மொழி வழக்கு இல்லாதவன் நான். ஒரு வேலை அதுகூட காரணமாக இருக்கலாம்.
- பாடல்கள் அருமையாக இருந்தாலும், பின்னணி இசை அமைக்க இன்னும் G.V.Prakash-ku பயிற்சி தேவை. இளையராஜா, ரஹ்மான் போல் பின்னணி இசை அமைக்க இன்று இருக்கும் மற்ற இசையமைப்பாளர்களால் முடியவில்லை என்பது தமிழ் சினிமாவிற்கு அவமானமே.
- பொல்லாதவன் படத்தில் எனக்கு இருந்த அதே குறை இந்த படத்திலும் உண்டு. கதாநாயகி 3 பாடல்கள் மற்றும் 5 காதல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் வெற்றிமாறன். படத்தில் முக்கிய கதாபாத்திரம் இல்லாததுக்கூட எனக்கு வருத்தம் இல்லை. முக்கியத்துவம் இருப்பதுபோல் trailer மட்டும் posters வெளியிட்டதே தவறு.
என் பார்வையில் : தமிழ் சினிமாவை முன்னுக்கு தள்ளிச் செல்ல துடிக்கும் சிலரில் ஒருவரான வெற்றிமாறனுக்கு கிடைத்த வெற்றி பரிசு இந்த ஆடுகளம்.

Baley .... Nadu nilai thavaramal vimarsanam thandathukku nandri
பதிலளிநீக்குpradeep.
really a nice review... appreciate it..!!
பதிலளிநீக்குNice review..!!
பதிலளிநீக்குvery good review..
பதிலளிநீக்குNice one, expecting for more films.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர்களே!!!
பதிலளிநீக்குi love this flim
பதிலளிநீக்கு